Thursday, July 2, 2009

டயலாக்ஸ்: கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க....

பணி நிமித்தம் சென்னையில் இருக்கும் நண்பர் ஒருவர் தனது ஊர்த் திருவிழாவைப் பற்றி ஊரில் இருக்கும் தனது நண்பரிடம் தொலைபேசியில் பேசியது.

சென்ற வருடம்:

நண்பர் 1:என்னடா பங்ஸ்(பங்காளி) திருவிழாவெல்லாம் எப்படி போச்சு?

நண்பர் 2:அத ஏண்டா கேக்குற இந்த வருஷமும் வடக்கித் தெருவாய்ங்களுக்கும் ,தெக்கித் தெருவாய்ங்களுக்கும் சண்ட,கரகாட்டக்காரிகள கையப் புடிச்சு இழுத்து பெரிய ரகள பண்ணிட்டாய்ங்கடா.

நண்பர் 1:காட்டுமிராண்டி கூட்டம்டா,இந்த மயித்துக்குத்தான் நான் ஊர் பக்கமே வாரதில்ல..

இந்த வருடம்:

நண்பர் 1: என்னடா பங்ஸ் திருவிழாவெல்லாம் எப்படி போச்சு?

நண்பர் 2: யப்பா எனக்குத் தெரிஞ்சு இந்த வருஷந்தாண்டா ஒரு சண்ட சச்சரவு இல்லாம திருவிழா நடந்துச்சு.நீயும் வந்திருக்கலாம்டா.

நண்பர் 1: ஆமா,அங்க என்ன அமைதி மாநாடா நடத்துறிய.ஒரு திருவிழான்னா நாலு சண்ட சத்தமுன்னு இருந்தாத்தானடா பாக்க நல்லா இருக்கும்.

நண்பர் 2:?????

காலை நேரத்தில் நிறைய கல்லூரி மாணவ,மாணவிகளை ஏற்றியபடியே வந்து கொண்டிருக்கும் பஸ்ஸில் தங்களுடைய நிறுத்தத்தில் இறங்க எத்தணிக்கும் இரு மாணவிகள் படியில் ஜொள்ளுவிட்டபடியே நிற்கும் மாணவர்களிடம்,

மாணவி 1:கொஞ்சம் வழிய விடுங்க இறங்கணும்

மாணவி 2:அதான் ஏற்கனவே லிட்டர் லிட்டரா வழியுதே இன்னுமா வழியணும். அதற்கு மாணவர்கள் சொன்னது சென்ஸார்(யூகிக்க முடியுதா?).


பையனின் அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்த அவனது தந்தை அடி பிரித்து எடுத்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த பக்கத்து வீட்டுக்காரர்,

பக்கத்து வீட்டுக்காரர்:எதுக்கு அவன இப்படி போட்டு அடிக்குறீங்க?

அப்பா:பாருடா முப்பத்தாறு மார்க்குதான் வாங்கியிருக்கான்.

ப.வீட்டுக்காரர்:சரி சரி விடுங்க,அடுத்த பரிச்சையிலே நிறைய மார்க் எடுப்பான். ஆமா எந்த சப்ஜெக்டுல மாப்ள இவ்வளவு கொறச்சலா எடுத்திருக்க(பையனைப் பார்த்துக் கேட்கிறார்).


அப்பா:ஏலேய் அவன் மொத்தமாவே எல்லா பாடத்திலேயும் சேர்த்தே அவ்வளவுதாண்டா எடுத்திருக்கான்.

இதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொஞ்சம் டரியலாகி பின் சொன்ன டயலாக்கில் டரியலானார் பையனின் அப்பா.

ப.வீட்டுக்காரர்:அப்போ உம்ம புள்ள டோட்டலா(total) பாஸாகிட்டான்னு சொல்லுங்க.

8 comments:

நாஞ்சில் நாதம் said...

(யூகிக்க முடியுதா?).

ம்

தினேஷ் said...

//அங்க என்ன அமைதி மாநாடா நடத்துறிய.ஒரு திருவிழான்னா நாலு சண்ட சத்தமுன்னு இருந்தாத்தானடா பாக்க நல்லா இருக்கும்.//

ஆமாப்பா .. சண்டை இல்லாத திருவிழா , கிக்கு இல்லா சரக்கு மாதிரி..

தினேஷ் said...

பாசு உங்க ஜோக்கு டோட்டல்லா(total) பாஸூ.

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில் நாதம்,
(அப்புறமா தனியா மெயிலுங்க நீங்க புரிந்து கொண்டதை)

நன்றி சூரியன்,(ரசித்தேன் உங்க கமெண்ட்டை)

ஜானி வாக்கர் said...

சுமார் 10 வருடங்களுக்கு முன் ஜு வி ல் படித்த டயலாக் நெனைவில் வந்தது.

சினிமா தியேடர் ல் படம் ஆரம்பித்த பின் தாமதமாக வந்து இருக்கை இல் அமருபவர் பக்கத்து சீட் ஆசமியிடம்

நபர் 1 : படம் எப்போ போட்டாக ?

நபர் 2: " படம் போட்டு ஒரு வாரம் ஆச்சு

நபர் 1 : அப்போ ஒரு வாரமா நீங்க இங்க தான் உக்காந்து இருக்கீங்களா??

நபர் 2 : ???

வால்பையன் said...

நல்லாயிருக்குங்க டயலாக்!

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஜானி வாக்கர்(ஜூ.வி ஜோக் சூப்பர்)

நாடோடி இலக்கியன் said...

நன்றி வால்பையன்,(நம்ம பக்கமெல்லாம் வரமாடீங்களான்னு நெனச்சிருக்கேன்,வந்துட்டீங்க)