Thursday, May 13, 2010

பாஸான கூட்டமுங்க....

அனுப்புதல் :
9014,
ஒன்பதாம் வகுப்பு,

அ.உ.பள்ளி,

கே.கே.பட்டி.

பெறுதல்:
திரு.அமேரிக்க சுதந்திரப் போர் அதிகாரி,
ஒரத்தநாடு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்,

ஐயா,

எங்கள் ஊரில் கடந்த ஒரு மாத காலமாக அமேரிக்க சுதந்திரப் போர் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதால் தாங்கள் அதை முடித்து வைக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
ஊர் மக்கள் சார்பாக
தங்கள் கீழ்படிந்துள்ள மாணவி,
9014.

ஒன்பதாம் வகுப்பு படித்தபோது அரையாண்டுத் தேர்வில் `அமேரிக்க சுதந்திரப்போர் பற்றி ஒரு
கடிதம் வரைக` என்று வினாத்தாளில் கட்டுரை என்பதிற்குப் பதிலாக கடிதமென தவறுதலாய் அச்சாகியிருந்ததால் ஒரு மாணவியால் எழுத‌ப்ப‌ட்ட‌ பதில்தான் மேலே நீங்கள் வாசித்தது.

இப்படியான மாணவக் கண்மணிகள் நிறைந்த பள்ளியில் பத்தாம் வகுப்புவரை பயின்றதால் ”ஆலையில்லா ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை” யாக முதலிரண்டு ரேங்குக்குள் வந்துகொண்டிருந்தேன்.எனவே பத்தாம் வகுப்புவரை தேர்வு குறித்து பெரிதாக
பயம் இருந்ததில்லை.மற்ற பாடங்களைவிட ஆங்கிலத்திலும் சமூக அறிவியலிலும் முதல் மதிப்பெண்கள் எடுப்பதிலேயே அதிகக் கவனம் இருக்கும்.காரணம் அந்த இரண்டு பாடங்களையும் எடுத்த என்.ஏ ஸார். மனுஷன் சரியான கண்டிப்பு. ஆங்கிலத்தில் பெரிய போட்டியின்றி முதல் மதிப்பெண் எடுத்தபோதும் ஐமுனை போட்டி நிலவிய சமூக அறிவியலில் பெரும்பாலும் முதல் மதிப்பெண்ணை தவறவிட்டு விடுவேன்.ஒவ்வொரு முறை பேப்பர் திருத்திக் கொடுக்கும் போதும் உயிர் போய் உயிர் வரும்.மற்ற பசங்க சின்ன சின்ன தவறுகள் செய்திருந்தால் பெரிதாய் மதிப்பெண் குறைக்க மாட்டார் ஆனால் எனக்கு மட்டும் அப்படியே குறுக்கே ஒரு சிவப்புக் கோடிட்டு மூஞ்சில தூக்கி வீசுவார் பேப்பரை. அதனால் சமூக அறிவியலில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டுமே என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும் . என்னை கடுமையாகத் திட்டினாலும் எனது ஒவ்வொரு வளர்சிக்கும் மிகவும் பாடுபட்டவர் என்.ஏ.ஸார். அவரில்லாமல் நானில்லை என்றே சொல்லலாம் ஏனெனில் அவர்தான் என்னுடைய அப்பா. பிதாவே குருவாகும் பாக்கியம் எத்தனை பேருக்கு வாய்க்கும்.(ஆனாலும் கொஞ்சம் கஸ்டம்தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்).

+1,+2 தஞ்சையின் அரசர்(Rajah's) மேநிலைப் பள்ளியில். கழுதை கட்டெறும்பாகிய இடம். சினிமாத் தியேட்டர்களில் அட்டெண்டென்ஸ் வைத்திருந்தால் அந்த இரு வருடங்களின் வருகைப் பதிவு விருது எனக்குத்தான் கிடைத்திருக்கும். +1 அரையாண்டு பரிட்சையில்தான் பிட் அடிப்பதற்கான
முதல் முயற்சி. முன்னாள் குடியரசுத் தலைவர் ஜானி ஜெயில்சிங்கின் மறைவால் கெமிஸ்ட்ரி எக்ஸாம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் சில பள்ளிகளில் குறிப்பிட்ட தேதியிலேயே எக்ஸாம் நடத்திவிட்டபடியால் கொஸ்டின் பேப்பர் அவுட்டாகிவிட்டது. அதில் கிட்டத்தட்ட 90 சதவிகித கேள்விகள் படிக்காதவை (மீதியும் கூட கேள்விபட்டதாய் ஞாபகம்தான்). புதிதாய் மடமடன்னு பிரிக்கப் படாமலேயிருந்த புத்தகத்தை ஒரு நாள் இரவுக்குள் படிக்க முடியுமா? இந்தச் சூழலில் ஒரு அப்பாவி என்னதான் செய்வான்.ஆமாம் நானும் அதைத்தான் செய்தேன்.விடிய விடிய பிட் பிரிப்பரேஷன்.

பிட் அடிச்சு மாட்றவனுங்களை அடித்து துவைப்பதற்கென்றே அவதாரம் எடுத்தவர் போல் நடந்து கொள்ளும் ஆசிரியர்தான் ஹாலின் என்ட்ரன்ஸிலேயே வரவேற்றார். அவரைப் பார்ததுமே வியர்க்க ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் ”அவ்வளோ கஷ்டப்பட்டு எழுதிட்டு வந்தத தூக்கியா வீச முடியும், பிட் அடிச்சே ஆகணும்” என்கிற வைராக்கியத்தோட ஹாலுக்குள் நுழைந்து டெஸ்கில் அமர்ந்தால் வயிற்றை கலக்குவது போல் அவஸ்தை. வினாத்தாள் கொடுக்கும் முன்பாக “எவனாவது பிட் வச்சிருந்தா மரியாதையா கொடுத்திடுங்க, நீங்களா கொடுத்திட்டா ..” என்று அவர் சொல்லிமுடிக்கும் முன்பாகவே முதல் ஆளாக எல்லாத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டு நிம்மதியானேன்.


+2வில் எந்த ஒரு பாடப் புத்தகத்தையும் திருப்புதல் தேர்வுவரை திருப்பாததால் மொத்தத்தில் 300 மதிப்பெண்கள்கூட எடுக்காமல் இருந்த என்னின் ஒரிஜினல் பிராக்ரஸ் ரிப்போர்ட் அப்பாவிடம் மாட்டிக்கொள்ள பெரிதாய் கோபப்படாமல் என் மீதான அவரின் நம்பிக்கையை அன்பாய் வெளிப்படுத்தியதும் தவறையுணர்ந்து படிக்க ஆரம்பித்தபோது காலம் கடந்துவிட்டிருந்ததால் எந்த ஒரு சப்ஜெக்டையும் முழுதாய் கவர் செய்ய முடியாமல் ஜஸ்ட் ஃபர்ஸ்ட் கிளாஸில்தான் தேர்வானேன். “ இம்ப்ரூவ்மெண்ட் எழுதுகிறேன்” என்றபோது ”யானை பெருசா குசுவப்போவுதுன்னு பின்னாடியே பார்த்துகிட்டிருந்தா அது சீத்துன்னு குசுவுச்சாம்” என்ற பழமொழியை சொல்லிய எங்க அப்பா ”போதும்பா நீ எழுதினது” என்றபடியே கல்லூரியில் பி.எஸ்.ஸி கணிப்பொறி அறிவியலில் சேர்த்துவிட்டார்.


+2 வரை தமிழ் வழிக் கல்வியென்பதால் கல்லூரியில் பாடங்களை புரிந்து கொள்வதில் சிரமம். எக்ஸாமில்
எதை வேண்டுமானாலும் எழுதாலாமென்பது முதலில் தெரியாததால் பத்து நிமிடங்களிலேயே ஹாலைவிட்டு வெளியேறிவிடுவேன். `புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது` என்பதுபோல் அரியர் விழுந்தாலும் பிட் அடிக்கக் கூடாதென்று ஆரம்ப நாட்களில் இருந்தேன். மாட்டிக்கொண்டால் மூன்று வருடம் டீபார்ட் பண்ணிவிடுவார்கள். அதுக்கூட பரவாயில்லை பெரிய போர்டில் `இன்று பிட்டடித்து பிடிபட்டவர்கள்` என்று கொட்டையெழுத்தில் எழுதி கல்லூரியின் எண்ட்ரென்ஸிலேயே வைத்து விடுவார்கள். இதற்கு பயந்தே பிட் அடிப்பதில்லையெனினும் அடுத்தடுத்த செமெஸ்டர்களில் சில நீக்குபோக்குகள் அறிந்து பஸ்டிக்கெட்டில் குறிப்பெடுத்துக்கொண்டு போவதில் ஆரம்பித்து அடுத்தவனின் பேப்பரை பிடுங்கி எழுதுகிறவரை முன்னேற்றம்.

பிராக்டிகல் எக்ஸாமில் பிட் அடிப்பதென்பது அங்கீகரிக்கப்பட்டதைப் போல் இருந்ததால் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இருக்காது.கோபாலின்(COBOL) எலக்ட்ரிசிட்டி பில் மாதிரியான இருப்பதிலேயே மிகப்பெரிய புரோகிராம்தான் எப்போதுமே எனக்கு வந்துத் தொலைக்கும். அதையெல்லாம் பிட் பேப்பரில் எழுதுவதற்கே இரண்டு நாட்களாகும். அதனால் பிட் எழுதிவரும் எவனிடமாவது வாங்கி நோகாமல் நொங்கு சாப்பிடுவது வழக்கம்.

எழுபது சதவிகித மதிப்பெண்களோடு எம்.சி.ஏ வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்டோசைப் பற்றிய தெளிவே கல்விக் கூடங்களைவிட்டு வெளியில் வந்த பிறகே என்னைப் போன்றே பலருக்கும் கிடைத்ததென்றால் அது எங்களுடைய தவறு மட்டுமா என்றால் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

பள்ளி முதல் கல்லூரி வரையிலான
தேர்வு பயம் குறித்த தொடர் பதிவிற்கு ஆதி அவர்களால் அழைக்கப்பட்டிருந்ததை ஏற்று இப்பதிவு.

இத்தொடரைத் தொடர நான் அழைக்கும் நண்பர்கள்,

பிரபாகர்.

தமிழ்ப்பறவை.

சே.குமார்.

12 comments:

பிரபாகர் said...

அழகா சொல்லியிருக்கீங்க நண்பா! அருமையான நடை. நானும் கம்ப்யூட்டர்தான்! நிறைய ஒற்றுமைகள் நமக்குள். நினைவுகளைக் கிளர்ந்து எழுதுகிறேன்... அழைத்தமைக்கு நன்று...

இரவு முழுதும் தயாரித்த பிட்டுகள் ஹால் சூப்பர்வைசருக்கு... என்ன துணிச்சல்... சிரித்தேன். யானை சம்மந்தமான விஷயத்திலும் அவ்வாறே...

கற்று வந்ததும்தான் கம்ப்யூட்டர்! நிறைய ஒற்றுமை பாரி!

பிரபாகர்...

Jerry Eshananda said...

ரசித்தேன்.

அன்புடன் நான் said...

எதிர் பாக்கல.... நல்ல புள்ளன்னு நினைச்சேன்.....

சரி அது ஒரு காலம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வெகு நாட்களுக்குப் பிறகு.. அந்த நடை அப்படியே இருக்கு நண்பா.. வாங்க..:-)))

க.பாலாசி said...

//அதனால் பிட் எழுதிவரும் எவனிடமாவது வாங்கி நோகாமல் நொங்கு சாப்பிடுவது எப்போதும் வழக்கம்.//

அதேதாங்க... பிட்டடிச்சி பழகினப்பெறவு...எவன்டா எழுதிகிட்டு வருவான் நோகாம புடிங்கி நாம எழுதலாம்னு காத்திருந்திருந்த காலமது... ம்ம்...

ஆனாலும் வாத்தியாருக்கு பிள்ளையாப்பிறக்குறதுக்கு கொஞ்சம் பாவமும், புண்ணியமும் செய்திருக்கனும்ல....

இயல்பான நடை... ஆரம்பத்து கடிதத்தை படிக்கும்பொழுது அந்த வயதுக்கே உரிய உணர்வு..... வந்தது....

Thamira said...

ஆங்காங்கே சிரிப்பு வெடிகளுடன் சுவையான அனுபவங்கள்.

(ஆங்காங்கே ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளும் உள்ளன. கவனிக்கவும்)

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி பிர‌பாக‌ர்.(அழைப்பை ஏற்று விரைவில் ப‌திவை எழுதுங்க‌ ந‌ண்ப‌ரே).

ந‌ன்றி ஜெரி ஈசான‌ந்த‌ன்.

ந‌ன்றி க‌ருணாக‌ர‌ன்,(ஆஹா ஏன் சார் இப்ப‌டி,ர‌வுடிஸ‌ம் ,க‌டைசி பெஞ்ச் அப்ப‌டியெல்லாம் கிடையாதுங்க‌ ஸார்.சாப்ட் நேச்ச‌ர்தான் ப‌திவின் சுவார‌ஸ்ய‌த்திற்கு கொஞ்ச‌ம் எக்ஸ்டெண்ட் ப‌ண்ணி எழுதியிருக்கேன்,த‌வ‌றான‌ முடிவுக்கு வ‌ந்திடாதிங்க:)))))) ).


ந‌ன்றி கார்த்திகைப் பாண்டிய‌ன்,(ந‌ண்பா ,இடையில் இர‌ண்டு போஸ்ட் போட்டிருக்கேன் உங்க‌ளைத்தான் இன்த‌ ப‌க்க‌ம் காணும்).


ந‌ன்றி பாலாசி,(//கொஞ்சம் பாவமும், புண்ணியமும் செய்திருக்கனும்ல....//

இல்லை ந‌ண்பா புண்ணிய‌ம் ம‌ட்டுமே ப‌ண்ணியிருக்க‌னும்).


ந‌ன்றி ஆதி,(ஒரு ந‌ல்ல‌ புள்ள‌ எப்ப‌டியெல்லாம் நாச‌மா போச்சுங்கிற‌து உம‌க்கு சிரிப்பா இருக்கா.

பிழைக‌ள் நிறைய‌,க‌வ‌னிக்க‌வில்லை ஆதி ,தெரிந்த‌‌வ‌ரை திருத்திவிட்டேன்,இனியும் இருக்கிற‌தாவென‌ தெரிய‌வில்லை,சுட்டிய‌மைக்கு மிக்க‌ ந‌ன்றிங்க‌).

vasu balaji said...

:)). அருமை.

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி வான‌ம்பாடிக‌ள்.

அமுதா கிருஷ்ணா said...

அந்த லெட்டர் அருமை.உங்கள் பதிவும் அருமை...

நாடோடி இலக்கியன் said...

நன்றி அமுதா கிருஷ்ணா.

Karthikeyan said...

தோழரே நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. வாழ்த்துக்கள்